Saturday29September2012.By.Rajah.இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் எதிராக சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான மனித உரிமைச் சட்ட மீறல்கள் பயனுள்ள முறையில் இன்னமும் கவனிக்கப்படாமல் உள்ளதென்பதனை ஐ.நா மனித உரிமைச்சபையோருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என மனித உரிமை பேராளர் கரன் பார்கர் அம்மையார் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்துள்ள ஜெனீவா- ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 21வது கூட்டத் தொடரில் உரையாற்றும்போதே அவர் இக்கூற்றினைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான நீதியினைக் கோரி ஐ.நா மனித உரிமைச் சபையில் அவர் ஆற்றிய உரையில், எங்களின் பார்வையில் சிறிலங்கா அரசின் முயற்சிகள்
உண்மையை கண்டறிதல், நீதி வழங்கல், நட்ட ஈடு வழங்கல், மேலும் இவை நடக்காதவாறு செய்தல் ஆகிய விடயங்களிலும் போதாமையாக உள்ளதோடு உண்மையை கண்டறிவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் அது ஆபத்தானதாகும் என ஐ.நா மனித உரிமைச் சபையோருக்கு எடுத்துரைத்துள்ளார்.
உண்மையை கண்டறிதல், நீதி வழங்கல், நட்ட ஈடு வழங்கல், மேலும் இவை நடக்காதவாறு செய்தல் ஆகிய விடயங்களிலும் போதாமையாக உள்ளதோடு உண்மையை கண்டறிவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் அது ஆபத்தானதாகும் என ஐ.நா மனித உரிமைச் சபையோருக்கு எடுத்துரைத்துள்ளார்.
இலங்கைத்தீவில் 100 000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிர் இழந்ததை சிறிலங்கா அரசாங்கம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனைச் சுட்டிக்காட்டிய கரன் பார்கர், “சிங்கள வெற்றிப் பெருமிதம்” என்று ஐ.நா பொதுச் செயலரின் நிபுணர் குழுவினர் கூறியதைப் நினைவில் கொள்ளும் போது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் உண்மை, நீதி, நட்ட ஈடு, தீர்வு என்பன கிடைக்கப் போவதில்லை என்ற அச்சத்தினையும் ஐ.நா மனித உரிமைச் சபையோருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைச்சபையின் சிறப்பு கண்காணிப்பாளர்களை சிறிலங்காவுக்கு விரைவில் செல்ல ஐ.நா அனுமதி கோரும் என நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.
கரன் பார்கர் அம்மையார், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வளஅறிஞர் குழுவின் பிரதிநிதியாகவும் நா.த.அரசாங்கத்தின் மதியூரைஞர் குழுவின் பிரதிநிதியாகவும் உள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment