30.09.2012.By.Rajah.அமெரிக்கா ஜனாதிபதி பராக்
ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி
தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் குடியரசு கட்சியின் வேட்பாளராக மிட் ரோம்னியும், ஜனநாயக கட்சி சார்பில்
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் போட்டியிடுகின்றனர். ஒபாமாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் மிட் ரோம்னி போட்டியிடும் ஓஹியோ மாகாணம் மற்றும் நிவேதா, நியூ ஹாம்ஷைர் ஆகிய மாகாணங்களில் லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு டி.வி.டி.க்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அதில் ஒபாமாவின் தாயான ஆன் டன்ஹாம் இளம் வயதில் நிர்வாண நிலையில் காட்சி கொடுத்துள்ள புகைப்படங்கள் அடங்கியுள்ளன. இது குறித்து ஜனநாயக கட்சியின் ஆலோசகர் ஸ்டீவ் மர்பி கூறுகையில், எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவரை எந்தவித ஆதாரமும் இல்லாமல் தரம் தாழ்ந்த வகையில் குற்றம்சாட்டுவதாகும் என்று கூறியுள்ளார். மேலும் இத்தகைய செயலுக்கு பின்னால் இன பாகுபாடு மற்றும் பண அதிகாரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் |
0 கருத்துகள்:
Post a Comment