By.Rajah.உள்ளூரில் பொதிகளைப் பொறுப்பேற்று வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் யாழ்.நகரிலுள்ள சில தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் பொதிகளை ஒப்படைத்தவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பொதிகளுக்கு கிலோ அளவில் பெருந்தொகைப் பணம் அறவிடப்படுவதோடு துரித கதி, அதிவிசேட சேவை என்ற பெயரில் மேலதிக கட்டணங்களும் அறவிடப்படுகின்றன. வெளிநாடுகளிலுள்ள உறவுகளுக்கு உணவுப் பொருட்கள், அத்தியாவசியப்பாவனைப் பொருட்கள், உடுபுடைவைகள் போன்ற பொருட்களை அதிகூடிய கட்டணம் செலுத்தி அனுப்பிவைக்கின்றனர்.
ஒருசில தினங்களில் உரிய நாடுகளில் ஒப்படைப்பதாகக் கூறிப் பெற்றுக்கொண்ட பொருட்கள் பல வாரங்களாக ஒப்படைக்கத் தவறுகின்றமை ஒப்படைக்கப்பட்ட பொருட்கள் முழுவதும் உரியவருக்குச் சென்றடையாமை, உணவுப்பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பழுதடைந்த பின்னர் ஒப்படைக்கப்படுகின்றமை போன்றவற்றால் பொதுமக்கள் பெரும் கவலைக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாகி உள்ளனர்.
மேற்படி சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் உரியவர்களுடன் தொடர்பு கொள்ள முயன்றபோது தொலைபேசித் தொடர்பைத் துண்டித்து விடுகின்றனர். இதனையும் மீறித் தொடர்புகொண்டால் அனுப்பியது கிடைக்காவிடில் எங்களால் என்ன செய்யமுடியும்.
பொருட்கள் குறைவடைவதற்கு நாங்கள் பொறுப்பேற்கமாட்டோம் என்ற வகையில் பொறுப்பற்ற பதில்களைக் கூறி சாக்குப் போக்குச் செய்வதும் ஏமாற்றுவதும் சம்பந்தப்பட்டவர்களைக் கவலையடைய வைத்துள்ளது
0 கருத்துகள்:
Post a Comment