25.09.2012.By.Rajah.கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாகவே முன்னேற்றம் கண்டு வருவதாக சந்தை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. எனினும், உண்மையில் அங்கே என்ன இடம்பெறுகின்றது? என்பதனை இந்தக் கட்டுரை ஆராய்கின்றது.
கொழும்பு பங்குச் சந்தையின் கடந்த கால நிலை
இலங்கையின் பங்குச் சந்தை மீதான சந்தேகங்கள் அல்லது குழப்பங்கள் காரணமாக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 19 மாத காலமாக பங்கு வர்த்தக நடவடிக்கைகள் தொடர் வீழ்ச்சியினையே சந்தித்தன.
எடுத்துக்காட்டாக, 2011 - பெப்ரவரியில் 7,800 எனக் காணப்பட்ட அணைத்து பங்கு விலைச் சுட்டெண், 2012 - யூலையில் 5,000 எனச் சரிவு கண்டது. இதேபோல, 3.5 பில்லியன் ரூபா எனக் காணப்பட்ட சராசரி நாளாந்தப் புரள்வு (The average daily turnover), 0.5 பில்லியன் ரூபாய் என வீழ்ச்சி கண்டது. அத்துடன், சுமார் 24,000 எனக் காணப்பட்ட நாள் ஒன்றுக்கான பங்கு வர்த்தகம், சுமார் 4,800 என மிகக் கீழான நிலைக்குச் சென்று கொண்டிருந்தது.
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலை
இந்த நிலையில், சென்ற ஆகஸ்ட் மாதப் பிற் பகுதியில் இருந்து கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகளில் பல முன்னேற்றங்களை காண முடிந்தது. குறிப்பாக, அனைத்து பங்கு விலைச் சுட்டி 5,800 என தற்போது அதிகரித்துள்ளதுடன், சராசரி நாளாந்த புரள்வு மற்றும் பங்கு வர்தகங்கள் முறையே 1.6 பில்லியன் ரூபா மற்றும் 24,500 என மீண்டும் எகிறி வருகின்றன.
பங்குச் சந்தையில் சென்ற சில மாதங்களாகக் காணப்பட்ட பின்னடைவினால் 710 பில்லியன் ரூபா பெறுமதியான பங்கு வர்த்தகம் மீதான முதலீடுகளை இழக்க நேர்ந்ததுடன், தற்போது இதிலும் 368 பில்லியன் ரூபா மீட்சி கஶகாண முடிந்துள்ளதாக சந்தைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இந்த வகையில், இவை அனைத்தும் பங்குச் சந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்கினை சமிஞ்ஜை செய்கின்றன.
எனினும் இந்த முன்னேற்றங்கள் உண்மையானதா?
சந்தைக் குறிகாட்டிகள் கொழும்பு பங்குச் சந்தையின் முன்னேற்றத்தினை பறை சாற்றினாலும் இதனை நம்புவதா? இல்லையா? என்பது தொடர்பாக தற்போதும் பல குழப்பங்கள் நிலவுகின்றன. குறிப்பாக, மேற்படி முன்னேற்றங்கள் செயற்கையான முறையில் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளதாக ஒரு சாரார் கருதுவதுடன், பங்குச் சந்தை நடவடிக்கைகளில் தற்போது தளர்த்தி விடப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளே இத்தகைய வளர்ச்சிக்கு காரணம் என மறு சாரார் கூறுகின்றனர்
0 கருத்துகள்:
Post a Comment