30.09.2012.By.Rajah.அபுதாபியில் ஒரு வயது குழந்தையை
பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக வேலைக்கார பெண் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
அரேபியர் ஒருவரின் வீட்டில் ஆசியாவை சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து
வந்துள்ளார். சம்பவ தினத்தன்று கணவன், மனைவி இருவரும் வெளியே சென்ற பிறகு அந்த குழந்தையை கீழே படுக்க வைத்து, அவன் மீது ஏறி உட்கார்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அப்போது அக்குழந்தை கதறி அழுததும், குழந்தையை அடித்துள்ளார். பின்னர் தலையணையை எடுத்து குழந்தையின் வாயில் அமுத்தி அடக்கப் பார்த்துள்ளார். இந்த செயல்கள் அனைத்தும் வீட்டில் இருந்த ரகசியக் கமெராவில் பதிவாகி விட்டது. அந்தப் பெண் நிர்வாண கோலத்தில் குழந்தையை நாசப்படுத்திய காட்சியை பெற்றோர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதை போட்டு காட்டிய போது, நான் தான் இதைச் செய்தேன் என்று அப்பெண் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அப்பெண்ணுக்கு 15 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. |
0 கருத்துகள்:
Post a Comment