30.09.2012.By.Rajah.தனது
மனைவியை டெலிபதி மூலம் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி பக்கத்து
வீட்டுக்காரரை ஒருவர் துப்பாக்கியால் சுட்ட வினோத சம்பவம் அமெரிக்காவில்
நடந்துள்ளது.
அமெரிக்காவின் சென்டர்வில்லியில் வசிப்பவர் மைக்கேல் செலினட் (வயது 54). இவரது
பக்கத்து வீட்டில் வசித்து வந்த டோனி பியர்ஸை சுட்டுக் கொன்றார். இது குறித்து மைக்கேல் கூறுகையில், எனது மனைவியை பியர்ஸ் டெலிபதி முறை மூலம் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இது எனக்குத் தெரிய வந்ததால், சுய பாதுகாப்புக்காக பியர்ஸை சுட்டேன் என்றார். தன்னையும் டெலிபதி மூலம் மிரட்டியதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இதையடுத்து கொலை முயற்சி, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இவரை பொலிசார் கைது செய்தனர். இளம் வயதில் மைக்கேல் சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் மைக்கேல் இவ்வாறு நடந்து கொண்டதாகவும், இதுபோல பலமுறை அவர் மன ரீதியான பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளதாகவும் மைக்கேலின் சட்டத்தரனி கூறியுள்ளார். மருத்துவர்களும், மைக்கேல் மன ரீதியாக உடல் நலம் சரியில்லாதவர் என்று கூறியுள்ளனர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் இருப்பார் என்றும் அவரை குணப்படுத்த முடியாது எனவும் அவர்கள் சான்றளித்துள்ளனர். |
முகப்பு |
0 கருத்துகள்:
Post a Comment