28.09.2.12.By.Rajah.கிளிநொச்சி மத்திய கல்லூரி போரினால் சேதமடைந்த கட்டடத் தொகுதி அபிவிருத்தி என்ற பெயரில் உடைக்கப்பட்டு பெருந்தொகை நிதி செலவிடப்பட்டு வருகின்றதே தவிர, எந்த அபிவிருத்தியும் ஏற்படவில்லையென கிளிநொச்சியின் புத்திஜீவிகள் விசனம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த 1996 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் காரணமாக சேதமடைந்த கிளிநொச்சி மத்திய கல்லூரியின் இரு மாடிக் கட்டடம் கடந்த ஆண்டு இறுதிவரை புனரமைப்புப் பணிகள் எதுவும் இன்றியே இருந்துள்ளது. சுமார் பதினொரு வகுப்புகளின் கற்பித்தல் செயற்பாடுகளும் மேற்படி கட்டடத்தினுள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் மத்திய கல்லூரியின் மேற்படி குறித்த கட்டடத்தினை புனரமைப்புச் செய்வதாகக் கூறி அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியைப் பெற்று கட்டடத்தைச்சூழ வேலியொன்றும் அமைக்கப்பட்டது.
தற்போது வேறு ஒரு ஒப்பந்தகாரர் மூலமாக மேலும் நிதி ஒதுக்கப்பட்டு இடிபாடுகள் அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சுமார் பதினொன்று வரையான வகுப்புகள், பல்வேறு சிரமங்களின் மத்தியில் இங்கு இயங்கி வருகின்றன.
கடந்த ஜனவரியில் குறித்த பாடசாலைக்கு மூன்று மாத காலத்துக்குள், கட்டடம் அமைக்கும் பணிகள் நிறைவு பெறுமெனக் கூறிய போதும் ஒன்பது மாதங்களாகியும் எந்த அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment