Search This Blog n

18 September 2012

சுவிட்சர்லாந்தில் காட்டுவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

18.09.2012.By.Rajah.சுவிஸில் கரடி, ஓநாய், நரி, காட்டுப்பூனை போன்றவற்றின் எண்ணிக்கை பெருகியிருப்பதாக ரீன்ஹார்ட் ஸ்க்னீட்ரிக் தெரிவித்தார். இவர் வேட்டை, காட்டு விலங்கு உயிர்ப் பன்மீயத்துக்கான சுற்றுச்சூழல் துறையின் தலைவராவார்.
அனைத்து உயிரினங்களும் எண்ணிக்கையில் உயர்ந்திருப்பதாகக் கூறிய ஸ்க்னீட்ரிக், ஒவ்வொரு கோடைகாலத்திலும் கரடிகள் தமது நாட்டுக்குத் திரும்பிவருவதாகவும் ஓநாய்கள் இங்கு இனப்பெருக்கம் செய்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், சுவிஸ் காடுகளில் குட்டை வாலுடைய சிவிங்கிப் பூனை, காட்டுப் பூனை, நரி போன்றவை அதிகரித்துள்ளன.
பால்கன் தீபகற்பத்தில் இருந்து கடந்த சில வாரங்களாக மஞ்சள் நிற ஓநாய் சுவிஸ்சுக்குள் வந்து கொண்டிருக்கின்றன.
நீர்நாய் கூட நமது சுவிஸ் காற்றை சுவாசிக்கத் தொடங்கிவிட்டன என்று விளக்கினார்.
சுவிட்சர்லாந்து முழுக்க காட்டுவிலங்குகளை காண்பது எளிதாகிவிட்டது. புலால் உண்ணிகளும் இந்த மண்ணில் சுதந்திரமாக உலா வருகின்றன.
கடந்த 2006ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் ஒரு ஓநாய்கள் நாட்டுக்குள் வந்ததால், அந்த இனம் பலுகிப் பெருகிவிட்டது.
ஆண் ஓநாய்கள் இடம்பெயர்வதைப் போல, இந்தப் பெண் ஓநாய்கள் இடம்பெயர்வது கிடையாது.
அவை ஒரே இடத்தில் வசிப்பதை விரும்புகின்றன. கரடிகளும் இதே வாழ்க்கைமுறையைத்தான் பின்பற்றுகின்றன.
பெண்கரடிகள் சுவிஸ் நிலப்பகுதிக்குள் அதிக எண்ணிக்கையில் புகுந்துவிட்டன. புகுந்து இனப்பெருக்கத்தில் இறங்கிவிட்டன. கரடி இனமும் பெருகிவிட்டது.
முதன் முதலாக இங்கு ஓநாய்க் குட்டிகளின் குரல் கேட்டபோது, புது யுகம் பிறந்துவிட்டதாகவே எங்களுக்குத் தோன்றியது.
ஒநாய்கள் பெருகிக்கொண்டே போகும் என்று மகிழ்ச்சியுடன் கூறினார் ஸ்க்னீட்ரிக்.
அடர்ந்த காட்டுப் பகுதிகளில், மான்களும் அவற்றை இரையாகக் கொள்ளும் மற்ற காட்டுப் புலால் உண்ணிகளும் சேர்ந்தே பெருகுகின்றன என்றார்.
வன விலங்குகளால் மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என்றாலும் கரடிகளைக் குறித்து அவ்வாறு உறுதியாகக் கூற இயலவில்லை. அவற்றின் குணத்தை முன்னறிந்து கூறுவார் எவருமில்லை.
அவை சிலவேளைகளில் புரியாத புதிராக இருப்பதால் அவற்றால் அச்சுறுத்தலும் தொடர்கிறது.

0 கருத்துகள்:

Post a Comment