Search This Blog n

22 September 2012

சர்ச்சைக்குரிய திரைப்படத்தை யூடியூபிலிருந்து நீக்க முடியாது: அமெரிக்க நீதிமன்றம்

22.09.2012.By.Rajah..பிந்திய செய்திகள்..முகமது நபியை தவறாக சித்திரித்து எடுக்கப்பட்கூறப்படும் திரைப்படத்தை சமூக இணையதளமான யூடியூபில் இருந்து நீக்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்த சின்டி லீ கார்சியா, தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தன்னுடைய சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும், பல்வேறு நிலைகளில் பிரச்னைகளை சந்தித்து வருவதால் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை யூடியூபில் இருந்து நீக்க வேண்டும் என்று கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கின் பிரதிவாதியாக கூகுள் மற்றும் யூடியூப் இணையத்தளங்களை சேர்த்துள்ளார். அந்த வழக்கில், வீரத்தை வெளிப்படுத்தும் காட்சியில் தன்னை நடிக்க வைப்பதாக தயாரிப்பாளர் கூறியதால் நடித்தேன். திரைப்படத் தயாரிப்பின் போது நபிகள் நாயகம் தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி லூயிஸ் லாவின், இந்தத் திரைப்படத்தை யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளதற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார்

0 கருத்துகள்:

Post a Comment