Search This Blog n

23 September 2012

தேசிய மின் வழங்களுடன் யாழ்.குடா நாடு மீண்டும் இணைகின்றது

 

23.09.2012.By.Rajah.இந்த மாதம் 25ம் திகதி இலங்கை தேசிய மின் வழங்களுடன் யாழ்.குடாநாடு மீண்டும் இணைய உள்ளதாக மின் சக்தி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.


இலங்கையில் உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்ததைத் (1987) தொடர்ந்து சுமார் இரண்டு தசாப்தங்களிற்கும் மேலாக தேசிய மின் வழங்களில் இருந்து யாழ்.குடாநாடு விடுபட்டுள்ளது. இந்த நிலையிலே, இரண்டாயிரமாம் ஆண்டின் ஆரம்பத்தில் சுண்ணாகத்தில் உள்ள மின் பிறப்பாக்கிகள் மூலம் குடாநாட்டிற்கு மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும், இது அதிக செலவு மற்றும் சீரற்ற மின் விநியோகத்தினால் தேசிய மின் வழங்களை மீண்டு யாழ். குடாநாட்டிற்கு இணைக்க மின்சார சபை திட்டமிட்டிருந்தது.

இதேவேளை, யப்பானின் உதவியுடன் உப மின் உற்பத்தி நிலையம் ஒன்று கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேசிய மின் வழங்களை வவுணியாவில் இருந்து பெறுவதற்கான அனைத்து பணிகளும் நிறைவு கண்டுள்ளதாக மின் சக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

0 கருத்துகள்:

Post a Comment