புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2012, |
By.Rajah.பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும்
சமையல் காஸ் விலையை உயர்த்தி டீசல் விலையைக் குறைத்து உள்ளது.
பாகிஸ்தானில் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்புக் கிளம்பியதை
அடுத்து அந்நாட்டு அரசு டீசல் விலையைக் குறைத்து அதற்கு பதிலாக பெட்ரோல் மற்றும்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி உள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6.82 ரூபாயும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 62 பைசாவும் உயர்த்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் உயர்தர டீசல் விலை லிட்டர் 1.75 ரூபாயும், இலகு ரக டீசலின் விலை லிட்டருக்கு 14 பைசாவும் குறைக்கப்பட்டு உள்ளன. விலை ஏற்றத்துக்குப் பின் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 106.72 ரூபாய்க்கு விற்கப்படுகிறது |
0 கருத்துகள்:
Post a Comment