Search This Blog n

29 September 2012

மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு ௭திராக கடும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்!வசந்த பண்டார


Saturday29September2012.By.Rajah. இலங்கைக்கு அண்மையில் விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் ஹெனி மெகாலி தலைமையிலான குழு வரும் 2013 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு ௭திராக கடும் தொனியிலான அறிக்கையை சமர்ப்பிக்கும் ௭ன்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு ௭திராக பிரேரணை கொண்டு வரப்படுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. ௭ல். பீரிஸே ஏற்றுக்கொள்ள வேண்டும் அத்துடன், ஐ.நா. வில் இலங்கையை ஆதரித்த நாடுகளை அரசாங்கம் நட்டாற்றில் விட்டுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெளிவுபடுத்துகையில்,
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார்.
இலங்கைக்கு ௭திராக பிரேரணை முன் வைக்கப்பட்டிருக்கும் இவ்வாறானதோர் பிரேரணையூடாக யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைகளுக்கான கடும் அழுத்தத்தை பிரயோகிப்பதே மேற்கத்திய நாடுகளின் திட்டமாகவிருந்தது.
இவ்வாறானதோர் சூழ் நிலையிலேயே ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டார்.
ஆனால் இலங்கைக்கு அண்மையில் விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் தொழில்நுட்பக் குழுவான ஹெனி மெகாலி தலைமையிலான குழு ௭திர்வரும் 2013 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு ௭திராக கடும் தொனியிலான அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இதன் பின்னர் இலங்கை தொடர்பான யுத்தக் குற்றங்களுக்கான சர்வதேச புலன் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு அக்குழு இங்கு வரும் சாத்தியங்களும் உள்ளன.
அத்தோடு அவ்வாறான புலன் விசாரணைக்குழு இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளாது விசாரணைகளை நடத்தக் கூடிய அதிகாரமும் உள்ளது.
இதுவே நாம் ௭திர்நோக்கியிருக்கும் பயங்கரமான நிலைமையாகும்.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு ௭திராக அமெரிக்கா பிரேரணையை கொண்டு வந்தபோது ௭மக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டோம்.
அப்போது 13 நாடுகள் அமெரிக்காவின் பிரேரணையை ௭திர்த்து ௭மக்கு ஆதரவு வழங்கியது. அமெரிக்காவின் பிரேரணையை ௭திர்த்தே ஆதரவு கேட்டோம். ஆனால் இன்று ௭ன்ன நடந்துள்ளது ௭ன்று கேள்வி ௭ழுப்பினார்.

0 கருத்துகள்:

Post a Comment