26.09.2012.By.Rajah.இடைவிடாத முயற்சியே வெற்றிக்குக் காரணம்; யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் | |||||
நடத்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளமை எனது ஆசிரியர்களின் மாணவர்களின் விட முயற்சியினால் கிடந்த வெற்றி என யாழ் .இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபர் சு.தியாகலிங்கம் தெரிவித்தார்.
வட மாகாணத்திலே யாழ். இந்து ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேற்றில் முதல் நிலை பெற்றுக் கொண்டமை தொடர்பாக ஒன்லைன் உதயனுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் இருந்து இம்முறை பரீட்சைக்கு 309 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இதில் 143பேர் சித்தியடைந்துள்ளனர் இது எமது பாடசாலைக்கு கிடந்த மிகப் பெரும் வெற்றியாகும் அத்துடன் கலைச்செல்வன் கீர்த்திகன் 191 புள்ளிகளையும், ஸ்ரீகந்தராசா ஆரணி 190 புள்ளிகளையும் பெற்று மாவட்ட நிலையில் முன்னனியில் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.[புகைப்படங்கள்¨] | |||||
0 கருத்துகள்:
Post a Comment