23.09.2012.By.Rajah.தன்னை
விட பத்து வயது குறைந்த பிரபல கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்கை, காதலித்து வந்த
பிரபல பொப் பாடகி ஷகீரா தற்போது கர்ப்பமடைந்துள்ளதாக தனது இணையத்தளத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்(வயது 25). தனது சிறப்பான
ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர். கடந்த 2010ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்து தொடர் மற்றும் இந்த ஆண்டு யூரோ கிண்ண கால்பந்து தொடர் ஆகியவற்றில் ஸ்பெயின் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தவர். தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வருகிறார். ஜெரார்டு பிக்கின் ஆட்டத்தில் கவரப்பட்ட கொலம்பியா நாட்டை சேர்ந்த பிரபல பொப் பாடகி ஷகீரா, அவருடன் சுற்றி திரிந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சந்தித்து, பழகி வந்த இருவருக்கும் இடையே உடல் ரீதியான உறவு இருப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஷகீரா தெரிவித்திருந்தார். இருவரும் சேர்ந்து பல இடங்களில் சுற்றினர். இந்த நிலையில் தற்போது ஷகீரா கர்ப்பமாக இருப்பதாக, அவரே தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பலருக்கும் தெரிந்தது போல நானும், ஜெரார்டும் எங்களின் முதல் குழந்தையின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இந்த இனிமையான நேரத்தில் எங்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக மற்ற பணிகளை சில நாட்களுக்கு தள்ளி வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். ஷகீராவிற்கு குழந்தை பிறக்கும் திகதி குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை. ஷகீராவின் அறிவிப்பை தொடர்ந்து இந்த வாரம் இறுதியில் அவர் லாஸ் வேகாஸில் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகி உள்ளார். எதிர்காலத்தில் ஷகீரா ஒரு தாயாகவும், ஒரு பாடகியாகவும் தனது வாழ்க்கையை தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள ஷகீராவுக்கு தற்போது 35 வயதாகிறது. ஆனால் பிக்கிற்கு 25 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. |
0 கருத்துகள்:
Post a Comment