22.09.2012By.Rajah..முகமது நபியை இழிவுபடுத்தும்
வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களை
போராட்டக்காரர்கள் தாக்கினார்கள். இதில் லிபியாவில் உள்ள தூதரக அதிகாரி கிறிஸ்டோபர்
ஸ்டீவன்ஸ் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. பிரச்சினைக்குரிய திரைப்படத்தை வெளியிட்ட யூடியூப் நிறுவனத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக பரவியுள்ள பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் ஒபாமா அரசு தொலைக்காட்சி, எப்.எம்.ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தங்களுக்கும், இந்த திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. சுமார் 30 வினாடிகள் தொலைக்காட்சியில் வரும் இந்த பிரசார விளம்பர படம் 7 சேனல்களில் ஒளிபரப்பாகிறது. இதற்காக பாகிஸ்தானில் உள்ள டெலிவிஷன் சானல் நிறுவனத்துக்கு 70 ஆயிரம் டொலர் பணம் வழங்கப்பட்டதாக செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலாந்து கூறியுள்ளார். பிரசார விளம்பர படத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், அமெரிக்கா எல்லா மதத்தையும் மதிக்கிறது. மதத்துக்கு எதிரான எந்த இழிவு செயல்களையும் அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்டு உள்ளார். ஹிலாரி கிளிண்டன் கூறுகையில், நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம். இந்த வீடியோ காட்சிக்கும், அமெரிக்க அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அதை உறுதியாக எதிர்க்கிறோம். நாங்கள் மதசகிப்பு தன்மைகொண்டவர்கள் என்றார். அமெரிக்காவின் இந்த பிரசார விளம்பரம் உருது மொழியில் வெளியானது. மேலும் பல எப்.எம்.ரேடியோவிலும் இந்த விளம்பரம் ஒலிபரப்பப்பட்டது |
0 கருத்துகள்:
Post a Comment