Search This Blog n

22 September 2012

யாழ். வேம்படியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: சாரதியும் நடத்துனரும் தப்பியோட்டம்

 
 
22.09.2012.By.Rjah.யாழ். வேம்படிப் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் இரு பேருந்துகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
கொழும்பை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து வவுனியா நோக்கிச் சென்ற அரச பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்தில் சிக்கிக் கொண்டன.
இவ்விபத்துச் சம்பவத்தினால் இரு பேருந்துகளில் இருந்தவர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் தனியார் பேருந்தின் சாரதியும் நடத்துனரும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பயணிகளின் பயணத்திற்கான காசுகளையும் மீதிப் பணத்தினையும் கொடுக்காமல் தனியார் பேருந்தின் நடத்துனர் தப்பிச் சென்றுள்ளதால் பயணிகள் திண்டாடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

Post a Comment