Search This Blog n

13 September 2012

தொழிலுக்கு சென்ற மீனவர் நடுக்கடலில் மாயம்: வடமராட்சி கடலில் சம்பவம்


 
 
 
By.Rajah.வடமராட்சி கடலில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் படகுடன் காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த 11ம் திகதி கடற்றொழிலுக்குச் சென்ற தேவசகாயம் துரைராசா வயது 40 என்ற தொழிலாளியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது.
வழமை போல் இவரும், இவரது உறவினரும் கடலுக்கு சென்றுள்ளனர். ஆனால் வழமைக்கு மாறாக அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேறொரு படகை எடுத்து வருவதாக கூறி இவரது உறவினர் கரைக்கு சென்றுள்ளார்.
திரும்ப வந்து கடலில் பார்த்தபோது அவர் காணாமல் போயுள்ளனார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இவரை தேடும் நடவடிக்கையை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்

0 கருத்துகள்:

Post a Comment