Search This Blog n

30 September 2012

இளம் கால்பந்தாட்ட வீரரை குத்தி கொன்ற 14 வயது பெண் கைது

30.09.2012.By.Rajah.தெற்கு லண்டனில் இளம் கால்பந்தாட்ட வீரரை கத்தியால் குத்தி கொன்றதாக 14 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிக்ஸ்ட்டன் நகரில் லோபோரோ எஸ்டேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே 15 வயது கால்பந்தாட்ட வீரர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், இறந்து கிடந்தார்.
இக்கொலைக்கும், 14 வயது இளம் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, அப்பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட இந்த பெண் நீதிமன்றத்திற்கு நாளை அழைத்து வரப்படுவாள் என்று பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவன் ஒருவனை கைது செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே என் மகனை கொலை செய்த நபரை யாராவது பார்த்திருந்தாலோ, இக்கொலை குறித்து யாருக்கும் ஏதேனும் விபரம் தெரிந்தாலோ உடனடியாக பொலிசாரிடம் தெரிவிக்கும்படி இறந்து போன சிறுவனின் தாய் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

Post a Comment