Search This Blog n

29 September 2012

கணவன் மனைவிக்கு இடையில் சண்டை குழந்தை அடித்துக் கொலை!


Saturday29September2012.By.Rajah.இரண்டு வயது மற்றும் 2 மாதம் நிரம்பிய குழந்தையை தாக்கி கொலை செய்த சந்தேகத்தில் கணவன் - மனைவி ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகலெவ - வீரகொல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் இக்கொலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த குழந்தையை அதன் தந்தை கற்குகை ஒன்றுக்குள் மறைத்து வைத்துள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து குழந்தையை பெற்றுத் தருமாறு தாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து குழந்தை கொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீகலெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

Post a Comment