By.Rajah.பல்வேறு காரணங்களால் கடந்த 2010 ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம்
திகதி வரையான காலப்பகுதியில் 9412 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று பொலிஸ்
ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண
தெரிவித்தார்
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களின் பெருமளவிலானோர் ஆண்கள் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் இரத்தினபுரி மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களிலிருந்தே பெருமளவான தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, மேற்படி தகவல்களின் படி சுமார் 40 முதல் 55 வயதுக்கு உட்பட்டோரே அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டின் 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட 41 சிறுவர்களும் 77 சிறுமிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
குடும்பப் பிரச்சினைகள், காதல் தொடர்புகள், தொழில்சார் பிரச்சினைகள், போதைப்பொருளுக்கு அடிமையாதல், சொத்துக்களை இழத்தல், மனநோய்க் காரணங்கள், தம்மை மிகவும் அண்மித்த உறவுகளின் உயிரிழப்பால் ஏற்படும் விரக்தி போன்ற காரணங்களால் இந்தத் தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அனைத்துவித பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. நபரொருவர் தற்கொலை செய்து கொண்டால்
அவரது உயிர்போவது மாத்திரமல்ல அந்த தற்கொலையால் உயிரோடு இருப்போரும் முழுச் சமூகமும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.
ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டப்படுவோர் இலங்கை குற்றவியல் சட்டத்தின் 299 ஆவது பிரிவின் தண்டனைக்குரியவராகிறார். அவ்வாறு ஒருவரை தற்கொலைக்கு தூண்டுபவருக்கு மரண தண்டனையும் வழங்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளார் மேலும் கூறினார்

0 கருத்துகள்:
Post a Comment