Search This Blog n

26 September 2012

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை தடுக்க இரகசிய மகஜர்

 
 
 
புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2012, By.Rajah.எதிர்வரும் 2013ம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை தடுக்க இரகசிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு , ஏழு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களினால் இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், புலி உறுப்பினர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடத்தல் உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வை நடத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தாருஸ்மன் அறிக்கை பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்துமாறு வலிறுத்த வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு இரகசிய மகஜர் அனுப்பி பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நிறுத்த முயற்சிப்போர் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

Post a Comment