Search This Blog n

28 September 2012

இலங்கை,இந்தியா ஆகிய நாடுகளில் இருந்த பெண்கள், துபாயில் விபச்சாரம்!

          
 
Friday28September2012.By.Rajah.இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து பெண்களை துபாய்க்கு அனுப்பி அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த விபசார வர்த்தக செயற்பாடு ஒன்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய குற்றப் புலனாய்வுத்துறையினர் இது தொடர்பில் பூனலூரில் சாந்தா என்ற பெண் முகவர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
கடந்த 5 வருடங்களில் மாத்திரம் தாம் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து 120 பெண்களை துபாய்க்கு அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல பெண்கள் ஒரு கடவுச்சீட்டை பயன்படுத்தி துயாய்க்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு என்றுக்கூறி அனுப்பப்பட்ட பெண்கள் துபாயில் விபசார தொழில்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்களி;ல் பலர் நாடு திரும்பியுள்ள போதும் சமூகத்துக்கு பயந்து பொலிஸில் முறைப்பாடுகளை செய்யவில்லை.
எனினும் இந்தியாவில் நான்கு பெண்கள் பொலிஸில் முறைப்பாட்டை செய்துள்ளனர்.
இதனையடுத்து இந்த வியாபாரத்துடன் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

Post a Comment