Search This Blog n

19 September 2012

இராணுவ மேஜர் அழுத்தம் காரணமாகவே முறைப்பாட்டை மீளப் பெற்றார்; சரத் பொன்சேகா தெரிவிப்பு

19.09.2012.By.Rajah.இராணுவ மேஜர் அழுத்தம் காரணமாகவே தனது முறைப்பாட்டை மீளப்பெற்றுக் கொண்டார் என முன்னால் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் நிலவுகின்ற அசாதாரண நிலைமைக்கு இச்சம்பவமானது மற்றுமொரு சிறந்த உதாரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியதுடன்,

மேஜர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒவ்வொரு இராணுவ வீரரும் இச்சம்பவத்தினால் கவலையடைந்திருக்கிறார்கள். தமக்கு சரியான நீதி கிடைக்க வேண்டுமென அவர்கள் நினைக்கிறார்கள். என்றோ ஒருநாள் அது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் அவர்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும்.

இப்பொழுது நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பார்கள் நாட்டில் என்ன நடக்கிறதென்று. குற்றச் செயல்கள் தொடர்பில் அதிகாரத்தில் உள்ளவர்கள் கண் தெரியாதவர்களாகவும் காது கேளாதவர்களாகவும் இருக்கிறார்கள் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment