பெங்களூரில் குண்டு வெடித்ததில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பெங்களூர் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த சர்ச் சாலையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் சென்னையை சேர்ந்த பவானி, மற்ற இருவரின் பெயர்கள் கார்த்திக், சந்தீப் என்று தெரிய வந்துள்ளது.
தலையில் படுகாயத்துடன் பவானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடிகுண்டு வெடித்த இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்.
அந்தப் பகுதியை பொலிசார் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை மத்திய அமைச்சர் சதனாந்த கவுடா நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இருவரை பெங்களூர் பொலிசார் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment