3 பெண்கள் கடலில் குதித்து தற்கொலை அரவிந்தர் ஆசிரமத்தை கண்டித்து 20.12.14 முழு கடையடைப்பு பஸ்கள் மீது கல்வீச்சு
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று வாழைக் குளம் பகுதியில் உள்ளது. இங்கு பீகாரை சேர்ந்த சகோதரிகளான ஜெயஸ்ரீ(வயது 54), அருணா(52), ராஜஸ்ரீ(49), நிவேதிதா(48), ஹேமலதா(39) ஆகியோர் தங்கி ஆசிரமத்திற்கு சேவை செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் 5 பேரும் ஆசிரம நிர்வாகத்தினர் சிலர் தங்களை பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீசில் புகார் செய்து இருந்தனர்.
இதையடுத்து ஆசிரம விதிமுறைகளை மீறியதாக 5 சகோதரிகளையும் அந்த குடியிருப்பில் இருந்து வெளியேற ஆசிரம நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் குடியிருப்பில் இருந்து அவர்கள் வெளியேற மறுத்தனர். மேலும் இதுதொடர்பாக ஆசிரமம் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ஆசிரமத்திற்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து 5 சகோதரிகளும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 6 மாத கால அவகாசம் அளித்து குடியிருப்புகளை காலி செய்யும்படி உத்தரவிட்டது. இதை தொஅடர்ந்து ஆசிரமம் அவர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டது இதனால் விரக்தியடைந்த அவர்கள் 5 பேரும் தாய், தந்தை ஆகியோரும் தற்கொலை செய்வதற்காக கடலில் குதித்தனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் மீட்டகப்பட்டனர்.
இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. ஆசிரம நிர்வாகத்தை கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. ஆசிரமம் மற்றும் ஆசிரமத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது தாக்குதல் நடந்தது.
மேலும் ஆசிரமத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரமத்தை அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி இன்று முழு அடைப்பு நடத்தப்போவதாக சமூக அமைப்புகள் அறிவித்தன. இதற்கு காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புதிய நீதிகட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தன.
இன்று காலை முழுஅடைப்பு தொடங்கியது. புதுவையில் உள்ள பெரிய மார்க்கெட், சின்னக்கடை மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட் ஆகியவை இயங்கவில்லை. கடைகள் அமைந்துள்ள முக்கிய வீதிகளான நேருவீதி, காந்திவீதி, அண்ணாசாலை, காமராஜர்சாலை, மறைமலை அடிகள் சாலை ஆகியவற்றில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
தனியார் பஸ்கள் முற்றிலும் ஓடவில்லை. புதுவை அரசு பஸ்களும், தமிழக அரசு பஸ்களும் இயக்கப்பட்டன. ஆட்டோ, டெம்மோ ஓடவில்லை. அரசு பஸ் மீதும் தணிர் பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. னியார், அரசு பளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கபட்டு உள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment