குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழைபெய்தது. இந்த நிலையில் இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குமரிக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது அங்கிருந்து நகர்ந்து, இந்தியப்பெருங்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைக்கொண்டிருக்கிறது.
இதன்காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைபெய்யும். சென்னையை பொறுத்தவரையில், ஒரு சில பகுதிகளில் மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது. காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவின்படி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 6 செ.மீ., பரமக்குடி, பாம்பன் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment