விசாரணை ஆரம்பம்! அமெரிக்க முன்னாள் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை, வெளியுறவுத் துறைப் பணியில் இருந்து விலகியிருக்கும்படி மத்திய அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர், "கட்டாயக் காத்திருப்போர்' பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அண்மையில் தனியார் ஊடகத்துக்கு அவர் மேலதிகாரியின் அனுமதியின்றி அளித்த பேட்டி, அமெரிக்காவில் இந்திய தூதரகப் பணியில் இருந்தபோது தனது குழந்தைகளுக்கு இரட்டை பாஸ்போர்ட் வைத்திருந்த தகவலை மீண்டும் தாயகம் திரும்பியதும் மறைத்தது உள்ளிட்ட செயல்களுக்காக அவர் மீது நடத்தப்பட்ட துறை ரீதியிலான விசாரணையின் அடிப்படையில் வெளியுறவுத் துறை இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. வெளியுறவுத் துறையில், இயக்குநர் நிலையில் உயரதிகாரியாகப் பதவி வகித்து வந்த தேவயானி கோப்ரகடே, தில்லியில் உள்ள தனியார் தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்த சர்ச்சைக்குரிய பேட்டியில் கூறியிருந்ததாவது: "எனது குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்தவர்கள். அதனால் அவர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைத்துள்ளது. அதே சமயம், வம்சாவளி இந்தியர் என்ற முறையில் அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டையும் வைத்துள்ளனர். நான் தில்லிக்கு திரும்பி வந்துவிட்டாலும், எதிர்காலத்தில் எனது குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல அந்நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் என்ற முறையில் அமெரிக்க பாஸ்போர்ட்டை அவர்கள் வைத்திருப்பதில் தவறில்லை எனக் கருதுகிறேன். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment