: டெல்லி: கேரளா மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இத்தாலி வீரர் லட்டோர் தமக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மனு காலத்தை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
இந்திய மீனவர்கள் 2 பேர் கொலை வழக்கில், இத்தாலி கடற்படை வீரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், இதய அறுவை சிகிச்சைக்காக ஜாமீன் பெற்று இத்தாலி சென்றுள்ள கடற்படை வீரர் மஸ்ஸிமிலானோ லாட்டோர், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் காலத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து இத்தாலியிலேயே இருக்கக் கோரிக்கை வைத்து மனு அளித்திருந்தார்.
மேலும், சல்வடோர் கிரோன், தான் இத்தாலி சென்று கிறிஸ்துமஸ் பண்டிகையை அங்கு தனது குடும்பத்துடன் கொண்டாட அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவின் சட்ட விதிகளை இருவரும் மதிக்க வேண்டும் என்றும், உடல் நலத்தைக் காரணம் காட்டி வீரர் இத்தாலி சென்றுள்ளார். தற்போதைய நிலையில் இருவரும் தனித்தனியே இதுபோன்ற மனுக்களை அளிப்பது சரியில்லை. இதுபோன்ற சலுகைகள் உலகின் எந்த நாட்டிலும் கிடைக்காது என்று கூறி நிராகரித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment