பெங்களூரில் நேற்று இரவு உணவகம் அருகே குண்டு வெடித்ததில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார். இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இந்த தாக்குதல் கண்டிப்பாக தீவிரவாத தாக்குதல்தான் என்று கர்நாடக உள்துறை மந்திரி கே.ஜே ஜார்ஜ் தெரிவித்துள்ளார். எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இதனிடையே, குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினரும் தடவியல் நிபுணர்களும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை தேசிய புலானாய்வு குழு மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு இன்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment