டெல்லியில் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ துணை மாணவி கும்பலால் கற்பழித்து கொலை செய்யப்பட்ட 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று டெல்லியில் கடைப்பிடிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோரால் நடத்தப்படும் நிர்பயா அறக்கட்டளை சார்பில் டெல்லியில் நேற்று நடந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுனம் கடைபிடித்தனர்.
அஞ்சலி நிகழ்ச்சியில் உரையாற்றிய மாணவியின் தாயார் உணர்ச்சிமிகு தனது உரையில், “கொல்லப்பட்ட நாளில் 2 அல்லது 3 மணி நேரத்தில் திரும்பி வருவேன் என்று கூறி சென்ற என் மகள் திரும்பி வரவே இல்லை. கனநேரத்தில் ஏற்பட்ட அவளது மரணம் எங்களை மிகவும் வாட்டியது. ஆனால் கொல்லப்பட்டவர்களுக்கு இன்னும் சட்டப்படியான தண்டனை இதுவரை கிடைக்கவில்லை” என்றார்.
அஞ்சலி நிகழ்ச்சியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பாரதீய ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி, முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் மாணவிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment