விபத்தில் கை, கால்களை இழந்த இராணுவ வீரர்பெங்களூரு: பெங்களூரு அரசு சொகுசு பஸ்சின் பின்புற டயர் பேலூர் அருகே கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவரின் சாமர்த்தியத்தால் 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பெங்களூருவில் இருந்து அரசு சொகுசு பஸ் ஒன்று சிக்மகளூரு நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60 பயணிகள் இருந்தனர். அந்த அகரே கிராமத்தில் சென்றபோது பஸ்சின் பின்பக்க டயர் ஒன்று கழன்று தனியாக ஓடியது.
இதை பஸ்சின் முன்பக்க ஓரக் கண்ணாடி மூலம் டிரைவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதை அறிந்த பஸ் பயணிகளும் என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தனர்.
இருப்பினும் பஸ்சின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சின் வேகத்தை படிப்படியாக குறைத்து, பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். இதனால், பஸ்சில் இருந்த 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அதிர்ச்சியில் இருந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் சாமர்த்தியமாக செயல்பட்டு விபத்தில் இருந்து காப்பாற்றிய டிரைவரை பயணிகள் பாராட்டினார்கள்.
இதுகுறித்து, பஸ் டிரைவர், கண்டக்டர் சிக்கமகளூரு அரசு பஸ் டெப்போவிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு பஸ் டெப்போ ஊழியர்கள் பஸ்சில் கழன்று ஓடிய டயரை பொருத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த அரசு சொகுசு பஸ் சிக்கமகளூரு நோக்கி சென்றது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment