டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளியின் தோட்டக்காரர் கைது செய்யபட்டார்.
புதுடெல்லியில் உள்ள ராம்ஜெஸ் தனியார் பள்ளி ஒன்றில் தோட்டக்காரராக கடந்த 28 வருடங்களாக பணியாற்றி வந்தவர் சங்கர் லால் (வயது 50). கடந்த ஒரு மாதமாக பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமி ஒருவரை தனியாக அழைத்து போய் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதை யாரிடமாவது கூறினால் புல்வெட்டும் கத்திரியை காட்டி உன் முதுகில் குத்தி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி பள்ளிக்கூடம் போக மாட்டேன் என அடம் பிடித்து உள்ளார். இது குறித்து பெற்றோர் விசாரித்த போது கடந்த ஒருமாத காலமாக தோட்டகாரர் தவறான முறையில் நடந்து உள்ளது தெரிய வந்து உள்ளது. உடனடியாக இது குறித்து பள்ளியின் மேலாளர் திவேஷ் குப்தாவிடம் தெரிவித்து உள்ளனர்.
உடனடியாக் அவர் போலீசில் புகார் செய்தார் போலீசார் சங்கர் லாலை கைது செய்தனர்.
இது குறித்து பள்ளியின் மேலாளர் திவேஷ் குபதா கூறும் போது:-
கடந்த வெள்ளிகிழமை பெற்றோர்கள் இது குறித்து தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கபட்டு
சங்கர் லால் கைது செய்யபட்டார். இது தான் முதல் முறை இது வரை பள்ளி மாணவிகளோ, பெற்றொர்களோ எந்த புகாரும் கூறியது இல்லை. இந்த பலள்ளியின் பாதுகாப்புக்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment