நிலம்தான் விவசாயிகள் வணங்கும் தெய்வம் என்று நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்ற இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
டெல்லியில் பேரணியாகப் புறப்பட்ட இளைஞர் காங்கிரஸார், நேராக நாடாளுமன்றத்தை அடைந்து அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பேரணியாக வந்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும், வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைக்க முயன்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
ட்விட்டரில் குஷ்பு
இதனிடையே நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் உறுப்பினரும் நடிகையுமான குஷ்பூ, நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகளின் எதிர்காலத்தை கொல்வதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தையும், உரிமைகளையும், சுயமரியாதையையும் கொல்லக் கூடியது. விவசாயிகளின் நலனுக்குகாக ஏதும் செய்ய முடியாவிட்டால் அவர்களின் வளங்களை கெடுக்க நினைக்காமல் இருக்கலாம். நிலம் தான் விவசாயிகள் வணங்கும் தெய்வம் என தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment