மராட்டிய மாநிலம் நந்தூர்பர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கத்கான் கிராம மக்கள் வேனில் சென்றனர். அவர்கள் வேனில் லாகன் கட்வன் கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தலைகீழாக கவிழ்ந்து உருண்டது. இந்த விபத்தில்
வேனில் பயணம் செய்தவர்களில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment