ரெயிலில் பயணம் செய்பவர்கள் செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பினால் ரெயில் பெட்டி சுத்தம் செய்யப்படும் வசதி தமிழகம்–மும்பை இடையே செல்லும் ரெயில்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
குறுந்தகவல் வசதி
இந்திய ரெயில்வே சமீபத்தில் பயணிகள் செல்போனில் இருந்து குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்.) அனுப்பி தாங்கள் பயணம் செய்யும் ரெயில்பெட்டி, கழிவறையை சுத்தம் செய்ய வேண்டுகோள் விடுக்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது.
இந்த வசதி மூலம் பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் ரெயில் பெட்டிகள் மற்றும் கழிவறை சுகாதாரமாக இல்லாமல் இருந்தால் அதை சுத்தம் செய்ய தங்கள் செல்போனில் இருந்து குறுந்தகவல் அனுப்பி வேண்டுகோள் விடுக்கலாம்.
இதற்கு பயணிகள் ‘கிளின் என ஆங்கிலத்தில் டைப் செய்து பின்னர் இடைவெளிவிட்டு உங்கள் 10 இலக்க பி.என்.ஆர். எண்ணை டைப் செய்து 58888 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவேண்டும்.
அவ்வாறு செய்தால் குறிப்பிட்ட அந்த
பயணி பயணம் செய்யும் ரெயில் பெட்டியை சுத்தம் செய்ய உடனடியாக ஊழியர் வருவார். இந்த வசதி படிப்படியாக ரெயில்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் செல்லும் ரெயில்கள்
தற்போது இந்த வசதி மும்பையில் இருந்து தமிழகம் செல்லும் ரெயில்களான (வண்டி எண் 11013, 11014) லோக்மான்ய திலக் டெர்மினஸ்– கோவை எக்ஸ்பிரஸ், (வண்டி எண் 11021, 11022) தாதர்– திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், (வண்டி எண் 11027, 11028) மும்பை– சென்னை சென்டிரல் மெயில் ரெயில், (வண்டி எண் 11041, 11042) மும்பை– சென்னை
சென்டிரல் எக்ஸ்பிரஸ், (வண்டி எண் 12161, 12164) தாதர்– சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் (வண்டி எண் 11005, 11006) தாதா– புதுச்சேரி எக்ஸ்பிரஸ், லோக்மான்ய திலக் டெர்மினஸ்– எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரெயில்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment