சிறிலங்கா கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்பதற்காக தமிழகத்தில் இருந்து 140 பேர் அடங்கிய மீனவர்கள் குழு நாளை அல்லது நாளை மறுநாள் சிறிலங்கா செல்ல இருப்பதாக தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் சிறிலங்கா செல்வதற்கான அனுமதிக் கடிதத்தை , இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சினால் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், கோட்டைப்பட்டிணம், மண்டபம், ஜெகதாப்பட்டிணம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20 படகுகளின் மூலம், மீனவர்கள் இலங்கைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 20 பேரும் இலங்கை செல்ல இருப்பதாக அறியமுடிகிறது.
0 கருத்துகள்:
Post a Comment