இந்தியாவில் ஒரு வார காலம் சுற்று பயணம் செய்து வந்த எரிபொருள் இல்லா சூரிய சக்தி விமானம் சோலார் இம்பல்ஸ்-2 தற்பொழுது, வாரணாசியில் இருந்து மியான்மர் நாட்டை நோக்கி தனது பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது. அந்த விமானம் காலை 5.22 மணியளவில் வாரணாசி விமான நிலையத்தில் இருந்து திட்ட தலைவர் பெர்ட்ராண்ட் பிக்கார்டு தலைமையில் புறப்பட்டு சென்றது.
வாரணாசியில் நேற்றிரவு 8 மணிநேரம் அது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. விமானத்தின் விமானி மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆண்ட்ரி போர்ஸ்க்பெர்க், அகமதாபாத் நகரில் இருந்து வாரணாசி நோக்கி விமானத்தை ஓட்டி சென்றார். அந்த விமானம் மியான்மர் நாட்டின் மாண்டலேவில் இருந்து சீனாவின் சாங்கிங் மற்றும் நான்ஜிங் நகரங்களுக்கு சென்று அதன்பின்னர் அமெரிக்காவுக்கும் செல்கிறது.
0 கருத்துகள்:
Post a Comment