ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்தது.ராஜஸ்தானில் பன்றி காய்ச்லால் பலியானவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாரத்துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிகாய்ச்சலால் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் இறந்துள்ளனர்.கடந்த ஜனவரி1 தேதி முதல் மார்ச் 5 தேதி வரை ராஜஸ்தானில் 57 பேர் பன்றி காய்ச்சலால் பலியாகி உள்ளனர் என்று மாநில சுகாரத்துறை தெரிவித்துள்ளது.மாநிலம் முழுவதும் பன்றிகாய்ச்சலால் 5,856 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.
மேலும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாரத்துறை அதிகாரி டாக்டர் அசோக் பன்னகரியா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பன்றி காய்ச்சலை கட்டுபடுத்த மருத்துவமனைகளில் சுகாதரபணிகளை மேற்கொள்ளவும்,மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதற்காக அரசு தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment