உங்களுக்காக காத்திருக்கும் கில்லாடி பெண்!குறுந்தாடி வச்சிறிக்கீங்களா ? கை நிறைய சம்பளமா? (காணொளி இணைப்பு)
பெங்களூரில் உள்ள பெண் பொறியாளர் ஒருவர் திருமண வரன் தேடி வெளியிட்ட வித்தியாசமான விளம்பரம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தை சேர்ந்த இந்துஜா என்ற 24 வயது பொறியாளர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார்.
சேலத்தில் வசித்து வரும் அவரது பெற்றோர் முன்னணி திருமண இணையதளம் ஒன்றில் வரன் தேடி சமீபத்தில் விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.
மணமகன் தேடி வெளியிடப்பட்ட அந்த விளம்பரம் இந்துஜாவை பாதித்ததால், இதனை எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரே ஒரு விளம்பரத்தை வலைப்பக்கமாக வடிவமைத்துள்ளார்.
அதில், தான் எப்படிப்பட்டவர் என்றும், தனக்கு வரக்கூடிய கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது பற்றியும் அனைத்தையும் தெரிவித்துள்ளார்.
அந்த விளம்பரத்தில், தன்னை பற்றிய அறிமுகத்தில், நான் மது அருந்த மாட்டேன், புகை பிடிப்பதை வெறுக்கிறேன், பேட்மிண்டன் விளையாடுவேன், ஆடுவேன், பாடுவேன், கருப்பு கண்ணாடி அணிவேன், கஞ்சக்காரி அல்ல, ஷாப்பிங் அடிமையும் அல்ல, நட்புடன் பழகுவேன், ஆனால் நட்புக்கு முக்கியத்துவம் தரமாட்டேன், நான் திருமணத்துக்கான விளம்பரப் பொருள் அல்ல, வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்
என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனக்கு வரும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, குறுந்தாடி வைத்திருக்க வேண்டும், அவருக்காக சம்பாதிக்க வேண்டும், குழந்தைகளை வெறுப்பவருக்கு முன்னுரிமை, 30 நிமிடமாவது கலந்துரையாட தகுந்தவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விளம்பரத்தை பார்த்து பல விசாரணைகள் வந்து கொண்டே உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மூன்றே வாரத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் பார்த்துள்ள அவரது வலைப்பக்கம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment