கர்நாடக மாநிலம் ராஜ்பவானில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவர்னர் வாஜ்பாய் வாலா தேசியகீதம் இசைத்தபோது நடந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதியாக ராகவேந்திரசிங் சவுகான் நியமனம் செய்யப்பட்டார். அவர் பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அவருக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழா முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேடையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வகேலா, புதிதாக பதவி ஏற்ற நீதிபதி ராகவேந்திரசிங் சவுகான், தலைமை செயலாளர் முகர்ஜி உள்ளிட்டோர் எழுந்து நின்று கொண்டிருந்தனர். தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே கவர்னர் வஜூபாய் வாலா திடீரென மேடையில் இருந்து இறங்கி சென்றார்.
இதனால் விழாவில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் இதுபற்றி உதவியாளர் எடுத்துக் கூறினார். உடனே அவர் மீண்டும் மேடைக்கு வந்துவிட்டார். அவர் கவனக்குறைவால் அதாவது தேசிய கீதம் பாடல் இசை முடிந்துவிட்டதாக கருதி கழிவறைக்கு சென்றார் என்பது பின்னர் தெரிய வந்தது.
0 கருத்துகள்:
Post a Comment