இந்தி நடிகை சோனம் கபூர் நடிகர் சல்மான்கானுடன் ‘பிரேம் ரத்தன் தான் பயோ’ என்ற இந்திப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே நடந்தபோது,
சோனம் கபூருக்கு திடீரென பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனி விமானம் மூலம் மும்பை அழைத்து வரப்பட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், அவர் குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தான் வீடு திரும்பியதை சோனம் கபூர் டுவிட்டர் வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளார். அதில், ‘டிஸ்சார்ஜ். வீடு இனிய வீடு’ என்று கூறி இருக்கிறார்..
0 கருத்துகள்:
Post a Comment