புதுச்சேரி: புதுச்சேரியில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச சிடி காட்டி பலாத்காரம் செய்த பல்கலைக்கழக பேராசியருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை பேராசிரியராக இருந்து வருபவர் மதியழகன் (வயது 58). இவரது வீடு லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ளது.
பக்கத்து வீட்டை சேர்ந்த 13 வயது சிறுமி 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு மதியழகன் டியூசன் சொல்லி கொடுத்தார். அத்துடன் அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். இதுபற்றிய புகாரின் பேரில் சில தினங்களுக்கு முன்னர் மதியழகன் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதியழகன் வீட்டில் உள்ள கம்ப்யூட்டர், மற்றும் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் ஆகியவற்றில் சோதனை செய்யப்பட்டதில் அவர் ஏராளமான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்திருப்பது தெரியவந்தது. அதற்கான விபரங்களை போலீசார் கைப்பற்றினார்கள். பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அறை சீல் வைக்கப்பட்டது.
சுத்தம் செய்ய அழைத்துச் சென்று
பேராசிரியர் அந்த மாணவியை தனது அலுவலகத்துக்கு அழைத்து செல்லும்போது அந்த மாணவியின் பெற்றோரிடம் என் அலுவலகத்தில் கோப்புகளெல்லாம் சுத்தம் செய்யாமல் தூசியாக இருக்கிறது. அதை சுத்தம் செய்ய வேண்டும் எனவே அதற்கு உதவி செய்வதற்காக உங்கள் மகளை அழைத்து செல்கிறேன் என கூறியிருக்கிறார்.
ஆபாச சிடிக்கள்
ஒவ்வொருமுறை அழைத்து செல்லும்போதும் இதே தகவலைத்தான் பெற்றோரிடம் சொல்லியுள்ளார். அலுவலகத்தில் சிறுமியிடம் உனக்கு கம்ப்யூட்டர் கற்று தருகிறேன் என கூறி கற்று தருவதுபோல நாடகமாடி உள்ளார். அப்போது ஆபாச படங்களை ஓடவிட்டு அதை மாணவியை பார்க்க வைத்துள்ளார். அத்துடன் பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.
4 பிரிவுகளில் வழக்கு
இந்த தகவல் அனைத்தும் போலீஸ் எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியை பலாத்காரம் செய்திருப்பது உறுதியாகியிருப்பதால் அவர் மீது பலாத்காரம், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்மை பரிசோதனை
பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஆண்மை பரிசோதனை செய்வது வழக்கம். அதன்படி மதியழகனுக்கும் ஆண்மை பரிசோதனை நடத்துவதற்காக லாஸ்பேட்டை போலீசார் இன்று நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.
வெடித்த போராட்டம்
பேராசிரியர் மதியழகனுக்கு எதிராக நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. இன்றும் அதுபோல் போராட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிஞ்சி நகரில் உள்ள அவரது வீடு மீது தாக்குதல் நடைபெறலாம் என கருதி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 மாணவிகள் புகார்
நேற்று போராட்டம் நடத்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பேராசிரியர் மதியழகன் தன்னிடம் படிக்கும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அது சம்மந்தமாக அவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். எனவே பல்கலைக்கழக மாணவிகளிடம் பாலியல் தொல்லை நடைபெற்றுள்ளதா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment