பாலியல் பலாத்கார குற்றவாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட திமாபூரில் நிலைமை முன்னேற்றம் கண்டுள்ளது, மூன்று நாட்களுக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் பதர்பூர் பகுதியை சேர்ந்த வாலிபரான சையத் பரித்கான், நாகலாந்து மாநிலத்துக்கு உட்பட்ட திமாபூர் பகுதியில் வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த மாதம், நாகலாந்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரை கற்பழித்து விட்டார். இது தொடர்பாக போலீசார் சையத் பரித்கானை கைது செய்து திமாபூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆனால் கடந்த 5ம் தேதி, சையத் பரித்கானை பொதுமக்களே சிறையில் இருந்து இழுத்துச்சென்று நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துவிட்டனர். இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நாகாலாந்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்க மாநில அரசிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதற்கிடையே கொல்லப்பட்ட சையத், அசாமை சேர்ந்தவர் என்பதால் அங்கும் இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. சம்பவத்தை அடுத்து திமாப்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திமாப்பூர் முடங்கியது. 144 தடை உத்தரவு தொடர்ந்து அமல் படுத்தப்பட்டது. நேற்று முதல் அங்கு மீண்டும் அமைதி நிலவத் தொடங்கியது. திமாபூரில் நிலைமை தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது. இதனையடுத்து அங்கு
ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா மற்றும் வீடியோ காட்சிகள், புகைக்கப்படங்களை கொண்டு போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர். இருப்பினும் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. தொடர்ந்து போலீஸ்
விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதால், 3 நாட்களுக்கு பின்னர் வர்த்தக நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment