எல்லையை தாண்டி மீன்பிடித்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் ஒரு மாதம் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும் என்று காரைக்கால் மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மற்றும் நாகை மீனவர்கள் 86 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இந்நிலையில், காரைக்கால் மாவட்ட மீனவப் பிரதிநிதிகளின் கூட்டம், மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது.
இதில், இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும், அனைத்து படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக அரசிடம் முறையிடவும் முடிவு செய்யப்பட்டது.
காரைக்கால் மாவட்ட மீனவர்கள் யாராவது இலங்கை கடற்பகுதிக்கு சென்று மீன்பிடித்தது தெரிய வந்தால், அந்த விசைப்படகு உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன்,
அந்த மீனவர்கள் ஒரு மாதம் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி செல்வதால்தான் மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்று இலங்கை அரசு கூறி வரும் நிலையில், எல்லை தாண்டி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவப் பிரதிநிதிகள் அறிவித்திருப்பது மீனவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment