Search This Blog n

18 March 2015

தேயிலை தோட்ட தொழிலாளி புலி தாக்கி பலி

கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள பிதர்காடு கைவட்டா பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி மகாலட்சுமி(31) புலி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே இடத்தில் இன்று 8.30 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த புவனேஸ்வரன் (45) மீது காட்டில் பதுங்கியிருந்து புலி தாக்கி உயிரிழந்தார்.
புவனேஸ்வரனின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொதுமக்கள் புவனேஸ்வரன் உடலை எடுக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

 

0 கருத்துகள்:

Post a Comment