அமெரிக்காவின் சான்பிரான்ஸ்சிகோ சர்வதேச பல் மருத்துவ கல்லூரியில் இந்திய மாணவி ரந்தீர் கவுர் (வயது 37) பல் டாக்டருக்கு படித்து வந்தார். இதற்காக அவர் கலிபோர்னியா மாநிலம் அல்பனாய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து வந்தார்.
கடந்த 8–ந் தேதி மாணவி ரந்தீர் கவுர் அங்குள்ள சீக்கிய கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் அவரது வீட்டுக்குள் ரந்தீர் கவுர் தலையில் துப்பாக்கி குண்டு துளைத்த நிலையில் பிணமாக கிடந்தார். ஆனால் அவரை யாரும் பலவந்தமாக குடியிருப்புக்குள் புகுந்து சுட்டுக்கொன்றதற்கான ஆதாரங்கள் இல்லை என போலீசார் முதலில் தெரிவித்தனர்.
ஆனால் அதே நேரத்தில் ரந்தீர் கவுர் பயன்படுத்திய சில பொருட்கள் அவரது குடியிருப்பில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் கிடந்து உள்ளது. இது இந்திய மாணவி மரணத்தில் மர்மத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீக்கியர் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை நடத்தி விட்டு வந்த போது யாரோ மர்ம ஆசாமிகள் அவரை பின்தொடர்ந்து குடியிருப்புக்கு வந்து சுட்டுக்கொன்று இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த வழக்கில் போலீசாருக்கு சரியான துப்பு கிடைக்காத நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் யாரேனும் சந்தேகத்துக்குரியவர்கள் நடமாடினார்களா? என்பதை தெரிவிக்குமாறு போலீசார் அந்த பகுதி மக்களிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment