Search This Blog n

30 March 2015

கணவரை வெறுப்பதற்கு சமம் தாலியை அறுப்பது!!!

திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு பாஜக தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ''புகழுக்கு களங்கம் விளைவிக்கிற செயலாகத்தான் இதை நான் பார்க்கிறேன். மக்களால் மறந்துபோன திராவிட கொள்கைகளை மீண்டும் நினைவுபடுத்த வீரமணி இப்படி ஒரு காரியத்தை கையில் எடுத்துள்ளார். தாலி என்பது பா.ஜனதா அல்லது இந்து இயக்கங்களின் பிரச்சினை அல்ல. 
ஒவ்வொரு சகோதரியின் உணர்வு பிரச்சினை. எல்லா மதத்தவரும் தாலியை புனிதமாக சுமக்கிறார்கள். ஆபரேசன் தியேட்டரில் கூட தாலியை கழட்டி வைக்க தயங்கும் சகோதரிகளின் உணர்வோடு இவர்கள் விளையாடுகிறார்கள். உணர்வுப்பூர்வமான விசயத்தை கூட கொச்சைப்படுத்தும் செயலாகத்தான் இது கருதப்படும். வீரமணி போன்றவர்கள் ஆழ்ந்து சிந்திக்க கூடியவர்கள். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது இதற்கு என்ன அவசியம் வந்தது? மக்களையும், அவர்களின் 
உணர்வுகளையும் உதாசீனப்படுத்தும் மனநிலையில்தான் இவர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கான எதிர் கருத்துக்களையும், எதிர் விளைவுகளையும் வீரமணி நிச்சயம் சந்திப்பார். நாங்கள் போராட வேண்டியதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு பெண்களும் கணவனின் அடையாளமாக தனது உயிரினும் மேலாக மதித்து சுமக்கும் தாலியை 
அறுப்பதும், வெறுப்பதும் கணவனை வெறுப்பதற்கு சமமாகத்தான் கருதுவார்கள். எனவே இதற்கெல்லாம் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை விட தமிழகத்தில் உள்ள எல்லா பெண் சகோதரிகளும் வெகுண்டு எழுந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள்''எனத் தெரிவித்துள்ளார். கீழ்த்தரமான செயல்: இது தொடர்பாக பா.ஜனதா துணைத் தலைவர் வக்கீல் வானதி சீனிவாசன் 
கூறியதாவது:- திராவிடர் கழகம் 
பெரியாரின் கொள்கை வழி நடப்பது. அவர் நிறைய விசயங்கள் சொல்லி இருக்கிறார். ஆனால் அடுத்தவர் உணர்வுகளை புண்படுத்த சொல்லவில்லை. சாதி மறுப்பு அவரது கொள்கைகளில் முக்கியமானது. திராவிடர் கழகமும் சரி, திராவிடர்கழகத்தை தாய்க்கழகமாக கொண்டு உருவான தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளானாலும் சரி, சாதி பாகுபாட்டை களைய முழு மனதுடன் முன்வரவில்லை. அதற்கான திராணியும் இல்லை. பெண்களின் உணர்வு பூர்வமான
 விசயமான தாலியை கொச்சைப்படுத்தி அறுக்க சொல்வது மிக கீழ்த்தரமான, கேவலமான செயல். தமிழர் பண்பாடு, தேசியம், கலாச்சாரம் பற்றி வாய்கிழிய பேசுகிறார்கள். இந்த பண்பாட்டில் திருமணத்தின் அடையாளமாக தாலி விளங்குகிறது. அது குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. மதம் மாறி சென்றவர்களும் தங்கள் மத சின்னங்களுடன் தாலியை
 அணிந்து புனிதமாக கருதுகிறார்கள். 
பகுத்தறிவு என்று சொல்லி பெண்களின் உணர்வு சம்பந்தப்பட்ட செயல்களோடு விளையாடுவது தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது. எதிர்விளைவுகளை உருவாக்கும். திராவிடர் இயக்க கொள்கைகள் சிறிது சிறிதாக மங்கிவரும் நிலையில் ஒட்டு மொத்தமாக மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படுவதற்கான அடுத்த முயற்சியாகத்தான் இது அமையும்' என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment