Search This Blog n

12 March 2015

என்னை தூக்கில் போடுங்கள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு சொல்கிறார்

என்னை தூக்கில் போடுங்கள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு சொல்கிறார்காந்தியை விமர்சித்ததற்காக, தனக்கு எதிராக டெல்லி மேல்–சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பற்றி நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:–

என்னே வியப்பான செய்தி. எனக்கு கண்டனம் தெரிவித்து டெல்லி மேல்–சபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஆனால் அது மட்டும் போதாது. தேசத்தந்தை என்று அழைக்கப்படும் வஞ்சகரைப் பற்றியும், ஜப்பானிய பாசிச சக்திகளின் ஏஜெண்டை பற்றியும் தெரிவித்த கருத்துக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும்.

எனது சலுகைகளை பறிக்க வேண்டும் என்று சில எம்.பி.க்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு விதிகளை திருத்த வேண்டி இருக்கும். எம்.பி.க்களுக்கு ஐடியா தட்டுப்பாடு இருப்பதாக கருதி, அவர்களுக்கு நானே யோசனை கூறுகிறேன். நான் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன், என்னை கைது செய்து, விசாரணையே இன்றி தூக்கில் போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment