Search This Blog n

17 March 2015

தமிழக மீன்பிடி படகுகள் சேதம் இருவர் காயம்???

 சிறிலங்காவின் கடற்படையினர் தாக்கியதில் இரண்டு தமிழக மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 கச்சத்தீவு பிரதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் சிறிலங்காவின் கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 இதில் இரண்டு மீனவர்களும் காயமடைந்துள்ளனர்.
எவ்வாறாயினும், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment