சமூக போராட்டங்கள் நடத்துவதற்கு ஆதரவாக எனக்கு வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்தும் பணம் வரவில்லை என்று அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார்.
அன்னா ஹசாரே மீது குற்றச்சாட்டு
ஊழலுக்கு எதிராக போராடி வருபவரும், காந்தியவாதியுமான 77 வயது அன்னா ஹசாரே, போராட்டங்கள் நடத்துவதற்கு பக்கபலமாக அவருக்கு வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் இருந்தும் பணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்து அன்னா ஹசாரே வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்தும் எனக்கு பணம் வருகிறது என்று கூறப்படும் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். எங்களது இயக்கம் வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறது என்பதை யாராவது நிரூபித்தால், நான் பொதுவாழ்வில் இருந்து விலகி விடுகிறேன்.
ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு
நான் பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம் அங்கு ஒரு பையை வைப்பேன். அதில் 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை, உங்களால் முடிந்த பணத்தை போடுமாறு பொதுமக்களிடம் கேட்பேன். இவ்வாறாக சேர்த்த ஒவ்வொரு ரூபாய்க்கும் என்னிடம் கணக்கு இருக்கிறது.
0 கருத்துகள்:
Post a Comment